மருதானையில் இயங்கிவந்த போலி முகவர் நிலையம் முற்றுகை: 30 கடவுச்சீட்டுக்கள் மீட்பு – ஒருவர் தப்பியோட்டம்
மருதானையில் இயங்கி வந்த போலி முகவர் நிலையம் முற்றுகையிடப்பட்டு ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தில் போலி ஆவணங்களுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டதையடுத்தே இந்த முகவர் நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த முகவர் நிலைய உறுப்பினர்களே இப்பெண்ணுக்கு போலி ஆவணங்களை தயார் செய்து கொடுத்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
முகவர் நிலையத்திலிருந்து 30 கடவுச்சீட்டக்களும் ஆவணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இம் முகவர் நிலையத்திலிருந்த ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
பொலிசார் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.


Comments
Post a Comment