மட்டக்களப்பில் ரி-56 ரக துப்பாக்கியுடன் இளைஞன் கைது.!

.
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நகருக்குப் பயணித்த பஸ்ஸிலிருந்து ரி-56 ரகத் துப்பாக்கியொன்றை நேற்றிரவு பொலிஸார் மீட்டுள்ளனர். அத்துடன் சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலை அடுத்து, குறித்த பஸ்ஸில் சோதனை மேற்கொண்டு இத்துப்பாக்கியை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சித்தாண்டி என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நபர் தற்போது மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரனைகளுக்காக தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments