சுதந்திரம் 69 வது முஸ்லிமின் பார்வை.
ஏ.எல். நௌபீர்.
இந்த தேசம் நம்மையும் ஈன்றெடுத்தே உள்ளது. நாம் பிறப்பால் இந்த தேசத்தவரே. நாம் இந்த தேசத்தவர் என்ற உணர்வை எமக்கு உள்ளே இருந்து வெளிப்படுத்தும் போதே தேசத்துடனான எமது உறவு பலமடையும்.
நாம் ஒரு முஸ்லிமாகவும், பற்றுதிமிக்க இலங்கையனாகவும் வாழ வேண்டியது எமது பொறுப்பாபாகும். (Dual identity)
இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் அண்மைக் காலம் முதல் முஸ்லிம்கள் மீது பல தவறான அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதில் முஸ்லிம்களுக்கு நாட்டுப் பற்றில்லை என்பதும் ஒரு குற்றச் சாட்டாகும். நாம் அந்த குற்றச் சாட்டை மறுத்துரைப்பதற்கான தருணமே இந்த சுதந்திர தினம்.
நாம் சில பொறுப்புடன் இந்த சுதந்திர தின விழாவைக் கொண்டாட வேண்டும்.
நாம் கடமை புரியும் நிறுவனங்களில் கொண்டாட்ட நிகழ்விலே பூரணமாகக் கலந்து கொள்ளல். எமது தலையாய கடமையாகும். அது எமது முழு மொத்த சமூகத்தின் பிரதிநிதியாகவும் நம்மை அடையாளப்படுத்தக் கிடைத்த தருணமாகும். சரியாகப் பயன்படுத்துவோம்.
தேசியக் கொடியை இயற்றி வைத்தல் என்பதே அன்றைய நாளின் மிக முக்கிய நிகழ்வாகும். முடிந்தால் எமது வீடுகளிலும் பறக்க விடலாம். குறிப்பாக சிங்கள சகோதரர்களுடன் வாழும் முஸ்லிம்கள் கட்டாயமாக சிங்கள சகோதரர்கள் கொடியேற்றும் போது நாமும் எமது வீடுகளிலும் கொடியை இயற்ற வேண்டும்.
எனவே தேசப் பற்று மிக்க முஸ்லிம் பிரஜைகளாக நாம் ஒவ்வொருவரும் மாறுவோம்.


Comments
Post a Comment