முள்ளிப்பொத்தானை 95 அல்-முஜா முன் பள்ளி பாலர் பாடசாலைக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வு
முள்ளிப்பொத்தானை 95 அல்-முஜா முன் பள்ளி பாலர் பாடசாலைக்கான தளபாடங்கள் வழங்கும் நிகழ்வில் முன்னால் கிண்ணியா நகர மேயர் Dr.ஹில்மி மஹ்ரூப் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டிலிருந்து முள்ளிப்பொத்தானை 95 அல்-முஜா பாலர் பாடசாலைக்கான அலுமாரி வழங்கி வைக்கும் நிகழ்வு 2017.02.17ஆந்திகதி அல்-முஜா பாலர் பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னால் கிண்ணியா நகர மேயர் Dr.ஹில்மி மஹ்ரூப் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பாக ஒவ்வொரு பெற்றோருக்கும் பாரிய பொறுப்புள்ளது. தமது பிள்ளைகளை ஒழுக்கத்துடன் கூடிய கல்வியில் சிறந்து விளங்கக்கூடிய எதிர்கால நற்பிரஜைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் பல்வேறு தியாகங்களைச் செய்ய வேண்டும். சிறந்த கல்வி கற்ற சமூகமொன்றை உருவாக்குவதன் மூலமாகவே எமது சமூகத்தின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். எனவே, கல்வி தொடர்பான விடயங்களில் நாங்கள் அதிக முக்கியத்துவம் வழங்கி எமது செயற்பாடுகளை அனைத்தையும் முன்கொண்டு செல்வதோடு, எதிர்வரும் காலங்களிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொடுப்பதனூடாக நல்லொழுக்கத்துடன் கூடிய சிறந்த கல்வி கற்ற எதிர்கால சமூகமொன்றை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோமென தனதுரையில் தெரிவித்தார்.

Comments
Post a Comment