தம்பலகாம பிரதேச அரசியல் மாற்றமும் நாமும் தெளிவூட்டல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று 95ம் கட்டை முகைதீன் ஜும்மாப் பள்ளிக்கு அருகாமையில் நடைபெற்றது.

(Mahroof Nifras)

தம்பலகாமப் பிரதேச அபிவிருத்திக்கான 
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஒன்றியம் சார்பான கூட்டம்  நேற்று (07.02.2017) 95 ம் கட்டை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிக்கு அருகில் வாஹிட் ஆசிரியரின் இல்லத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இப்பிரதேசத்தில் உள்ள பலரும் பங்கு பற்றி தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் எமது பிரதேசத்தில் கடந்த காலங்களில் நாங்கள் இழந்த அபிவிருத்திகள் மற்றும் உரிமைகள் பற்றிய அவர்களின் ஆதங்கங்களையும் வெளிப்படுத்தினர்.

எமது பிரதேசத்தின் இன்றைய கல்வி நிலை மற்றும் எமது பிரதேச கல்வி முன்னேற்றதில் அக்கறை செலுத்தாத அரசியல் பீடங்கள் பற்றியும் மக்கள் தங்கள் கவலையினை தெரிவித்தனர்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் எந்த வித கட்சி பாகுபாடு, கோபதாபம், கருத்துவேறுபாடுகள் எதுவும் இன்றி எமது பிரதேசத்துக்கான  உரிமைகளை பெற்றெடுக்கும் நோக்கில் நம் பிரதேசம் சார்பாக ஒருவரையாவது மாகாண சபைக்கு அனுப்புதலும் இதற்கான சகல ஏற்பாடுகளையும் மக்களாகிய நாங்கள் முன்னின்று செய்வதோடு பூரண ஒத்துழைப்புகளையும் நல்குவோம் எனவும் கலந்து கொண்டோர் தெரிவித்து.

இன்ஷா அல்லாஹ் அடுத்த மக்கள் சந்திப்பிற்கான தினம் மற்றும் இடம் ஓர் இரு தினங்களில் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும்.


Comments