மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் என் பணிவான வேண்டுகோள்..
கிண்ணியாவின் அரசியல்வாதிகளுக்கு.
அண்மைக்காலமாக தேர்தல் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை யாவரும் அறிவீர்கள் இதன் மூலம் தேர்தல் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியம் இருப்பதை நாம் உணரலாம். கிண்ணியா மண்ணோடு தம்பலகாமப் பிரதேச மக்கள் நகமும் சதையுமாக ஆரம்ப காலம் தொட்டு இற்றைவரை இருந்து வருவது உண்மை. கிண்ணியா மண் எங்களுடைய தாய்,தந்தையர்களை உற்பத்தி செய்த மண் அதனை என்றும் மறவோம் விட்டுக் கொடுக்கக்கவும் மாட்டோம் எப்போதும் இணைந்திருப்போம். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இம்முறை நடக்கவிருக்கும் மாகாணசபை தேர்தலில் கட்டாயம் எமது தம்பலகாமப் பிரதேசத்துக்கு எதிராக உங்கள் சாணக்கியமோ ராஜதந்திரமோ ஒருபோதும் பிரயோக்கிக்கப் படக்கூடாது.எம்மைப் புறந்தள்ளி நீங்கள் மட்டும் தலை நிமிர்த்தி நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது உங்கள் மூளைகளில் உள்ள முண்ணான் கோளாறு என்றுதான் நாம் கருதுவோம். எங்கள் பிரதேசத்துக்கு ஒரு பிரதிநிதி தரவேண்டும் என்ற மனப்பாங்கில் 100 வீத நல்லெண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும் அவை எங்களை வழிப்படுத்த வேண்டும்.இதைப்பெறுவதற்காக எங்கள் முழு முயற்சியும் தியாகமும் இங்கே பிரயோக்கிக்கப் படும். இங்கே சொல்லப்பட்ட விடயம் கேளிக்கையாகவோ வேடிக்கையாகவோ நீங்கள் எடுத்துக் கொண்டால் நிச்சயம். உங்களின் அரசியல் வாழ்க்கையை மாற்றியமைக்கவும் எங்கள் சமூகம் தயங்காது.எங்களுடைய முன்னெடுப்புகளுக்கு மத்தியில் எந்தவொரு படையெடுப்பும் தூசாகவே எங்கள் முன்னாள் இருக்கும். எங்கள் பிரதேச வாக்குகளை எங்கள் பிரதேசத்துக்குள்ளேயே பயன்படுத்த நீங்கள் தான் வழிகோள வேண்டும். தயவு செய்து தம்பலகாம பிரதேச மக்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்த வேண்டாம். 13000 க்கும் அதிகமான முஸ்லீம் வாக்குகளும் 34000க்கும் அதிகமான மொத்த சனத் தொகையும் நாங்கள். எங்களை அவித்து இன்னொருவரின் உணவாக்க யாரும் துணை போனால் அல்லாஹ் பெரியவன். சுருக்கமாக சொன்னால் கிண்ணியா,மூதூர்,கந்தளாய்,புல்மோட்டை போன்ற இடங்களில் பிரதிநிதி ஒன்றைப் பெறமுடியுமாக இருந்தால் எங்களுக்கு மட்டும் அநியாயம் நடப்பதை எந்தளவு அனுமதிக்க முடியும்??


Comments
Post a Comment