தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரி விளையாட்டுப் போட்டி
தோப்பூர் அல்ஹம்றா மத்திய கல்லூரியின் 2017 க்கான இல்ல விளையாட்டுப் போட்டி கல்லூரி முதல்வர் ஏ.ஆர்.எம்.ஆரிப் தலைமையில் கடந்த 17 வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.
மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இவ் இல்ல விளையாட்டுப்போட்டியில் றூமி,ஹஸ்ஸாலி,இக்பால் ஆகிய இல்லங்கள் பலப்பரீசை நடாத்தின இறுதியில் ஹஸ்ஸாலி இல்லம் 201 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்துக்கு முன்னேறி கல்லூரியின் 2017ம் ஆண்டுக்குரிய வெற்றிக்கிண்ணத்தை சுவிகரித்துக் கொண்டது.முறையே இரண்டாம்,மூன்றாம் இடங்களை றூமி,இக்பால் இல்லங்கள் பெற்றுக்கொண்டன
இவ் போட்டிக்கு பிரதம அதிதியாக தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.ஏ.ஜப்பார் கலந்து கொண்டு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.
இல்ல விளையாட்டுப் போட்டியில் பல புதுமைகள் படைக்கப்பட்டதோடு,பாடசாலை மட்ட சாதனைகளும் நிகழ்த்தப்பட்டன,மாணவர்கள் பலர் மூன்று நிகழ்ச்சிகளிலும் சாதனை நிகழ்த்தி வெற்றிக்கிண்ணங்களை சுவீகரித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் அதிதிகளாக சேருநுவர பொலிஸ் நிலைய முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எப்.எம்.றமீஸ் (பொலிஸ் பரிசோதகர்) உட்படமூதூர் கல்வி வலயத்தின் உதவி கல்விப் பணிப்பாளர்களான பீ.ஹாஜா முகைதீன்,ஏ.எம்.ஜவாத் உட்பட பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Comments
Post a Comment