முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு ஞாயிறன்று
ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைத்து தேர்தல் தொகுதிகளிலிருந்தும் பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
கட்டாய உயர்பீட கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கட்சியின் பதவி வழி நிர்வாகிகளின் பெயர் விபரங்கள் இக்கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
கட்சியின் தவிசாளர் பஷிர்சேகுதாவூத் பதவியிலிருந்தும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கட்டாய உயர்பீட கூட்டத்திலும் பேராளர் மா நாட்டிலும், கட்சியின் யாப்பின்படி அவரால் கலந்துகொள்ள முடியாது.
இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய அரசியல் உயர்பீட கூட்டம் எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை தாருஸ்ஸலாமில் நடைபெறவுள்ளது. இக்கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர், தவிசாளர் உட்பட பதவி வழி உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.


Comments
Post a Comment