புல்மோட்டை கனியமணல் மருத்துவக் காப்புறுதி விவகாரம் – இது அமைச்சர் ரிசாதின் கவனத்திற்கு


இலங்கை கனியமனல் கூட்டுத்தாபன புல்மோட்டை வேலைத்தளத்தில் சுமார் 550 ஊழியர்கள் வேலை செய்கின்றனர் .

இவர்களுக்கு இலங்கை காப்புறுதிகூட்டுத்தாபனத்தின் ஊடாக கடமையின்போது 150.000 வரை மருத்துவ சலுகை காப்புறுதி பெறுவதற்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது .இக்காப்புறுதி அட்டையை காண்பித்து திருகோணமலை தனியார் மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெறுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர் .

திருகோணமலையிலிருந்து 300 கிலோமீட்டருக்கு அப்பாலிலுள்ள கொலும்பு .கண்டி ஹம்மாந்தோட்டை போன்ற தூர இடங்களிலுள்ள தனியார் மருத்துவ நிலையங்களுக்கு மாத்திரமே இச்சலுகை வழங்கப்பட்டுள்ளதால் தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது .

திருகோணமலயில் போதிய மருத்துவ வசதி இல்லாததே இதற்கான காரணம் என கனிய மணல் கூட்டுத்தாபன தலைமை அலுவலக அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுவதாக இவ்வூழியர்கள் தெரிவிக்கின்றனர் .

எனவே தங்களுடைய பிரதேசங்களுக்கு அண்மையிலுள்ள வவுனியா அனுராதபுரம் திருகோணமலை ஆகிய இடங்களிலுள்ள மருத்துவ நிலையங்களில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி வழங்கப்படவேண்டுமென இவ்வூழியர்கள் இந்நிறுவனத்திற்கு பொறுப்பான அமைச்சர் ரிசாத் பதியுதீனிடம்  கோரிக்கை விடுக்கின்றனர் .

Comments