திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சுதந்திர தின நிகழ்வு


69வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இணைவாக கிழக்கு மாகாண சபை மற்றும் திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சுதந்திர தினம்( அபிமானத்துடன் கொண்டாடுவோம் )எனும் தொனிப்பொருளில் இன்று (04) திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டு மைதானத்தில் கிழக்குமாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாந்து மற்றும் கிழக்கு முதலமைச்சர ஜெய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் திணைக்கள உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் பாடசாலை மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகள் முப்படையினரின் மரியாதை அணிவகுப்புடன் கலாச்சார நிகழ்வுகளும் இடம் பெற்றது.

இதில் கலந்து கொண்டு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ உரையாற்றும் போது சிந்தனையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி ,இன ரீதியாகவும் மத ரீதியாகவும் மொழி பிரிநதிருந்தால் எமது இலக்கை அடையமுடியாது பெற்றுக்கொண்ட சுதந்ந்திரத்தை மக்களை துன்பத்திலிருந்து விடுவித்து இன்பத்தை கொடுக்க வேண்டும்.மூவினத்தவர்களும் இணைந்து அணைவரும் ஒன்றினைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அனைவராலும் எதிர்பாக்கப்பட்ட முதலமைச்சரின் விசேட உரை இந்நிகழ்வில் இடம்பெறவில்லை .நிகழ்சிகள் முடிவடைவதற்குமுன்னர் முதலமைச்சர் வெளியேறிச்சென்றது பலரின் கவனத்தை ஈரத்த நிகழ்வாகும் தமிழ் அரசியல்வாதிகள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Comments