மஹிந்தவுக்கு சு.க தலைமை ; மார்ச் மாதம் விசாரணை


ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் தலைமைப் பதவியை மஹிந்த ராஜபக்சவுக்கே வழங்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மார்ச் மாதம் 13ம் திகதி இடம்பெறவுள்ளது.

சுதந்திரக் கட்சியின் தற்போதைய நிர்வாகம் தமது ஆட்சேபனையைத் தெரிவிக்கும் முகமாக இக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கட்சித் தலைமையை மஹிந்தவுக்கு வழங்கக் கோரி சு.கட்சியின் மஹிந்த ஆதரவாளர்கள் இருவரால் குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments