பொலிஸ் மருத்துவமனையில் மருந்துகள் திருட்டு!
பொலிஸ் மருத்துவமனையில் களஞ்சியப் படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான மருந்துகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் மருத்துவமனையின் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, இது தொடர்பில் தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றுக்கு இதனை அறிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தற்போழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாரஹேன்பிட்டி பொலிஸ் மருத்துவமனையில் பெருமளவான மருந்துகள் காணாமல் போயுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்தப் பரிசோதனையினை மேற்கொண்டுள்ளனர்.


Comments
Post a Comment