சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகுங்கள்!
இலங்கையின் 69வது தேசிய சுதந்திர தின விழா எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.
அதற்கமைய காலி முகத்திடலில் இடம்பெறவுள்ள பிரதான நிகழ்விற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இன்று முதல் ஒரு வார காலத்திற்கு அனைத்து வீடுகள், வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் தனியார் கட்டிடங்கள் மற்றும் வாகனங்களில் தேசிய கொடியை பறக்கவிட்டு சுதந்திர தினத்தைக் கொண்டாட தயாராகுமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு அனைத்து இலங்கைவாழ் மக்களையும் கேட்டுக்கொண்டுள்ளது.


Comments
Post a Comment