மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எதிராக ஆர்ப்பாட்டம்



(ihzana fareed)

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் இன்று  13 திங்கட்கிழமை  பாடசாலையை மூடி பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 07 ஆம், திகதி தி- மூதூர் அல்-ஹிலால் மத்திய கல்லூரியில் இடம் பெற்ற கூட்டத்தில் முஸ்லிம் வலயக் கல்விப் பணிப்பாளர்,  ஆசிரியர்களுக்கு தொழுகைக்கான நேரம் வழங்க வில்லை யெனவும், இது பற்றி பற்றி பிரஸ்தாபித்த போது தொழுகை முக்கியமில்லை , படிப்புதான் முக்கியம், மற்றும் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும் தான் படிப்பிக்கனும், படிக்காத மாணவர்களுக்கு படிப்பிக்க வேண்டாம்,  அவர்களை கைவிடவும், எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்ததாகவும் தெரிவித்தனர்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் தி/ மூதூர் அல்-ஹிலால் மகா வித்தியாலயம், தி/ மூதூர் அந்தோணியார் மகா வித்தியாலயம் ஆசிரியர்களும், மாணவர்களும் மற்றும் பெற்றோர்கள்,  நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 இவ் ஆர்ப்பாட்டம்  நேற்று  காலை ஆசிரியர்களும், மாணவர்களும்  பாடசாலைக்கு  சமூகமளிக்காது பகிஷ்ப்பு செய்து,  பாடாசாலை முன்றலிருந்து ஆரம்பமாகி வலயக் கல்வி பணி மனை வரை சென்று கோஷங்களை எழுப்பினர்.

 இதன் போது  மாணவர்கள் வலயக் கல்விப் பணிப்பாளருக்கெதிராக பின் வரும் சுலோகங்களையும் காணக் கூடியதாக இருந்தது.

 "கெட்டிக் கார மாணவர்களுக்கு மட்டும் பாடசாலை என்றால் பாடசாலை எதற்கு,

 " எங்கள் கல்வியை காலங்க படுத்தும் கல்வி அதிகாரியே வெளியேறு,

 "இருளுக்கு ஒளியூட்டி அறிவுக்கு உரமூட்டு ஆசான்ஙளைப் பாதுகாப்போம்,

 மூதூர் மக்களை அவமதிக்கும் மன்சூரே வெளியேறு போன்ற சுலோகங்களும் காணப்பட்டன.



Comments