பேருவளை படகு விபத்து: உயிரழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பேருவளை படகு விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

பொலிஸ் தகவல்கள் இதனை  தெரிவித்துள்ளன.

படகு கவிழ்ந்து ஏற்பட்ட இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் 11 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.

மேலும் சிலரை காணவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் கட்டுகுருந்த தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்தவர்கள் எனவும், அவர்களின் படகு கட்டுகுருந்த பகுதியிலேயே கவிழ்ந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த படகில் 16 பேர் வரை பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்வதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Comments