Skip to main content
தம்பலகாம பிரதேச அபிவிருத்திற்காகவும் பிரதேசத்தின் பிரதிநிதியின் அவசியத்தை வலியுறுத்தி ஒற்றுமையுடன் செயற்பாடுவோம்

நேற்று (03.02.2017) முள்ளிப்பொத்தானையில் தம்பலகாமப் பிரதேச மக்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.பாரிய முன்னெடுப்புகளைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பகுதியிலும் கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றமை அனைவரும் அறிந்த விடயமே. தம்பலகாமப் பிரதேச மக்களின் நலன் கருதியும் ஒட்டுமொத்த சமூகத்தினரதும் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கிலும் இக்கூட்டம் கூட்டப்பட்டது.
முக்கிய விடயம் தம்பலகாமப் பிரதேச மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சபைக்கான பிரதிநிதி ஒருவரை இப்பிரதேசத்தில் இருந்து அனுப்புதலும் எந்த வித கட்சி பேதமும் அற்ற சமுதாயத்தைக் கட்டி எழுப்புதலுமாகும்.என்ற தொனிப் பொருளில் பலரும் பல கருத்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் இதுவரை இயங்கி வந்த எமது விழிப்புணர்வுக் குழு "தம்பலகாமப் பிரதேச அபிவிருத்திக்கான ஒன்றியம்" என பெயர் சூட்டப்பட்டு இதே பெயரில் சமூக வலைத் தளங்களில் உலா வருவதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டது.
அத்தோடு அடுத்த கூட்டம் 06.02.2017 திங்கட்க்கிழமை மாலை 4 மணிக்கு 8ம் கொலனியில் நடைபெறுவதோடு முழு தம்பலகாமப் பிரதேசத்துக்கான கூட்டம் இன்சா அல்லாஹ் இன்னும் சில கூட்டங்களை தொடர்ந்து நடைபெறும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.எனவே எமது பிரதேசத்தின் முன்னேற்றம் கருதி கலந்து கொள்ளக் கூடிய அனைவரும் இன்சா அல்லாஹ் எதிர்வரும் திங்கட்கிழமை கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.




Comments
Post a Comment