அவதானம்- மக்களை சிரமங்களுக்கு உள்ளாகிய மின் கட்டண பட்டியல்!
மஹஇலுக்பல்லம கல்மடுவ மற்றும் தம்மென்கம பிரதேசத்தில் மீட்டர் வாசிப்பு இல்லாமல் மாதாந்த மின் கட்டண பட்டியல் அஞ்சல் ஊடாக நுர்வோருக்கு அனுப்பியதன் காரணமாக மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் மின்சார நுகர்விற்காக செலுத்தும் கட்டணத்தை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக பிரதேவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவது,
இந்த கிராமங்களுக்கு கெகிராவ மின்சார அலுவலகமே மின் கட்டண பட்டியலை விநியோகிக்கின்றது.
மீட்டர் வாசிக்கும் பணியாளர்கள் குறைவாகவுள்ளதால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அந்த அலுவலகத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த மக்களுக்கு அநீதி இழைக்கப்படாத வகையில் மின் கட்டண பட்டியல் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment