உடும்பு இறைச்சியுடன் ஒருவர் கைது
திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி இரண்டு கிலோ உடும்பு இரைச்சியை கொண்டு சென்ற நபர் ஒருவரை நேற்று செவ்வாய்கிழமை(31) மாலையில் கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சேருநுவர, எல்.பி.4 பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் துவிச்சக்கரவண்டியில் இரண்டு கிலோ உடும்பு இரைச்சியை கொண்டு சென்ற போது பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்திய போதே இரண்டு கிலோ உடும்பு இறைச்சி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபரை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


Comments
Post a Comment