பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும் – உதுமாலெப்பை
கோட்ட, வலய, மாகாண மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளையும், பல சாதனைகளையும் புரிந்த அல் – அர்ஹம் வித்தியாலய மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளை பாதிக்கும் வகையில் அண்மைக்கால நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றமை குறித்து கவலையடைவதாக கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாறை மாவட்ட ஒருங்கினைப்புக்குழு இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அல்- அர்ஹம் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் ஏ.எம் இத்ரிஸ் தலைமையில் அல்- அர்ஹம் வித்தியாலய மைதானத்தில் (9) நடைபெற்றது. இதன்போது நட்சத்திர அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் இக்கல்லூரியில் அர்ப்பணிப்போடு கல்விப் பணி புரிந்த சிறந்த அதிபர்கள், ஆசிரியர்களை படிப்படியாக இடமாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இக்கல்லூரியின் வளர்ச்சியை தடுக்க திட்டமிட்ட முறையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த முயற்சிகளை பல தடைவைகள் இப்பிரதேச மாணவர்களின் நலனுக்காக தடுத்தோம். தற்போதும் அம்முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் இக்கல்லூரியின் கல்வி வளர்ச்சியில் பாரிய வீழ்ச்சி ஏற்படும் நிலமை உருவாகியுள்ளது.
ஏழை மக்களினுடைய பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருந்து செயற்படுபவர்கள் குறித்து பெற்றோர்களும், பாடசாலை சமூகமும் அவதானம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் பெற்றோர்கள் கண்னும் கருத்துமாக செயற்பட்டு தங்களது பிள்ளைகளின் கல்வியில் அக்கரை செலுத்த வேண்டும்.
நாங்கள் எமது பிரதேச கல்வியில்; விஷேட கவனம் செலுத்தி முடிந்தளவு பணியாற்றியுள்ளோம். மேலும் இப்பிரதேசத்தினுடைய கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தும் வருகின்றோம். இந்த நிலைமையில் வறுமை கோட்டின் கீழ்; வாழும் மிகவும் பின் தங்கிய பிரதேச ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடிய அநீதியான செயற்பாடுகளை நாம் அங்கிகரிக்க முடியாதுள்ளது.
இப்பாடசாலை அதிபரால் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு இக் கல்லூரியில் இருந்து பதில் ஆளின்றி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை வழங்க வேண்டும். இக்கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கான அவசர ஏற்பாடுகளை நாம் மேற்கொள்வதுடன், இக்கல்லூரிக்கு பதில் ஆளின்றி ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளை கல்வி அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும்.
நானும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் வௌ;வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் என்ற போதிலும் இப்பிரதேச மக்களின் நன்மை கருதி எமது பிரதேசத்தின் கல்வித்துறையை கட்டியெழுப்புவதில் ஒன்றுபட்டு செயற்பட்டு வருகின்றோம். நமது மக்களின் நலனில் சந்தர்ப்பம் கிடைக்கும் காலமெல்லாம் அக்கரையாக இருந்து செயற்பட வேண்டிய கடமை நமக்குள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகள் ஒவ்வொன்றிலும் நீண்ட காலத்திற்கு பிறகு விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன இவை குறித்து நாம் மகிழ்சியடைய வேண்டும் பாடசாலை மட்டத்தில் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறுவதனால் மாணவர்கள் விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டி வருவதுடன் மாணவர்கள் ஆசிரியர்களுக்கு இடையில் கூட்டுறவு, கூட்டுப்பொறுப்பு தலைமைத்துவ பண்புகள் வளர்த்தெடுக்கப்படுகிறது.
இன்றைய நவீன உலகில் நாம் விளையாட்டுத்துறையிலும், உடற்பயிற்சிகளிலும் ஆர்வம் காட்டாத காரணத்தினால் நோயாளர்களாகவே வாழ வேண்டி சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பெரும் பணத்தை செலவு செய்து சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலையும் எமக்கு ஏற்பட்டுள்ளது. நமது முன்னோர்கள் “ நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்”என்று கூறிய பழமொழியின் யதார்த்தத்தினை இன்று நாம் உணரக்கூடியதாகவுள்ளது.
எப்போதும் இக்கல்லூரியின் வளர்ச்சியில் அர்ப்பணிப்போடு செயற்படும் அதிபர், ஆசிரியர் குழாத்திற்கும், பாடசாலை சமூகத்திற்கும் இப்பிரதேச மக்கள் சார்பில் எனது பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Comments
Post a Comment