"இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண்பதே அரசாங்கத்திற்கு உள்ள பிரதான சவால்"
இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண்பதே அரசாங்கத்திற்கு உள்ள பிரதான சவாலாகும். இதன்படி அதிகார பரவலாக்கம் தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம். அத்துடன் மூவின மக்களும் ஐக்கியத்துடன் இருந்தால் எமக்கு சர்வதேசத்துடன் இலகுவாக பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எனவே இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அப்போது எமக்கு சர்வதேசதத்திடமிருந்து பல உதவிகள் கிடைக்கபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரநாயக்கவில் ரெயினோ கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Comments
Post a Comment