இந்தச் சமரில் பல சந்திக்கு வராத சங்கதிகளை நிரூபிக்க வேண்டி வரும்

கிழக்கு முதல்வர் ஹாபீஸ் நஸீர் அகமட்டின் வன்னி உரை தொடர்பில்

அஸ்மி ஏ கபூர்

சாத்தான்கள் வேதமோதுவதை யாரும் பார்த்திருக்கிறீர்களா?

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை பற்றி எந்தக் காலத்திலும் பேச முடியாத ஒருவர்.

அந்தக் கட்சியை அதன் சின்னத்தை அழிக்க வேண்டும் என இரவு பகலாக கங்கனங்கட்டி திரிந்த ஒருவர்.

இதற்க்காக இந்த கட்சி பட்ட அவலங்களை பேச வேண்டுமா? 
ஏறி இறங்கிய நீதிமன்ற வாசல்கள் சேகரித்த ஆவணங்கள் வரலாற்றில் மு.கா.கட்சிக்கு யாருமே செய்திராத கொடுரங்களை புரிந்த ஒருவர்.

இன்று அந்த கட்சியை புகழ்ந்து பேசுவதையும் ரவூப்ஹக்கீமை எவ்வாறாகினும் இக்கட்டில் மாட்டி கட்சியை கவர்ந்து செல்லும் தொனியும் இன்றைய வன்னி கூட்டத்தில் காணக்கிடைத்தது.

வழமையாக பேசுகின்ற பாணியை முகா தலைவர் கைவிட்டிருந்தாலும் 
இவர் அவரின் எதிரிகளை தூண்டி தலைமைத்துவத்தை அடைகின்ற மறைமுக வேலைத்திட்டத்தில் இருப்பதையும் மு.கா.தலைவர் மறைமுகமாக இவரின் உரையை மேற்கோள் காட்டியதையும் உணர்ந்திருப்பீர்கள்.

அதை விடுத்து அதாஉல்லாஹ் சேரப் பேசுகிறார் என்று ஒரு பொய்யை தான் குர்ஆனை சுமந்தவன் என்பதை மறந்து மேடையிலே பேசுவதை அவரின் வெகுளித்தனம் என்பதா?

அல்லது தான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை அழிக்க கட்சிகள் உருவாக்கி இயலாமையினால் இன்றைய தலைவரின் பலவீனத்தை அறிந்து தாறுஸ்ஸலாத்தை வைத்து கள்ளத்தனமாக உள் நுழைந்தது போன்று

அதாஉல்லாவையும் கட்சியையும் அவர் நினைத்திருக்க கூடும்

அதாஉல்லாஹ் இடத்துக்கு ஏற்றார் போல் மாறுகின்ற பஞ்சோந்தி அல்ல
புலி பசித்தாலும் புல் திண்ணாது

மறைந்த தலைவர் மரணிக்கும் போது பேரியக்கமாக இருந்த கட்சிக்கு நடந்தது என்ன?

தலைவர் மரணித்த தேர்தலில் அம்பாரை யில் போட்டியிட்ட பேரியல் அஷ்ரப் அவர்களின் விருப்பு வாக்கு 117000

கடந்த தேர்தலில் பைசல் காசிம் பெற்ற வாக்குகள் 62000
ஏனைய கட்சிகள் பெற்ற வாக்குகள் 55000

மட்டக்களப்பு மாவட்டத்தில் அலிசாஹிர் மெளலானா நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என்பதையெல்லாம் இணைத்துக் கொண்டு ஹிஸ்புல்லாவிடமிருந்து மயிரிழையில் தப்பினீர்கள்

திருகோணமலையில் ஆசனத்தை இழந்தீர்கள்

வன்னியில் துரத்தப்பட்டீர்கள்

கண்டியில் ஐதேக இணைந்ததால் காப்பாற்றப்பட்டது ஆசனம்

இவ்வாறு பணத்துக்காகவும் பதவிக்காகவும் நீங்கள் அலைவதை மக்கள் உணராமலில்லை.

அதாஉல்லாஹ் தொடர்பான பொய்யான விமர்சனங்களை நிறுத்த வேண்டும்.

 அடுத்தவனின் சட்டிக்குள் கைவிடுகின்ற அற்பத்தனமான உங்களின் அறிவை தேசிய காங்கிரஸ் தொடர்பான அரசியல் பார்வையில் நிறுத்த வேண்டும்.

இல்லாது போனால் இந்த சமரில் பல சந்திக்கு வராத சங்கதிகளை நிருபிக்க வேண்டி வரும்.

Comments