திருமலை: நடமாடும் சேவையில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு


வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இணைந்து நடாத்திய இன்றைய (01) நடமாடும் ஆலோசனைச் சேவை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் இடம் பெற்றது.

இதில் பெரும்பாலான பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சருடன் நேரடியாக முறைப்பாடுகளை முன்வைத்தனர் .சிறுவர் விவகாரம் நல்லிணக்கப் பிரிவு அலுவலக அதிகாரிகள் மாவட்ட அதிகாரிகள் என பலரும் பங்கேற்று இச்சேவையினை மக்களுக்கு வழங்கியமையுடன் இவ் நடமாடும் சேவையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி இணைத்தலைவருமான அப்துல்லா மஹ்ரூபும் பங்கேற்றார்.

-ஹஸ்பர் ஏ ஹலீம்

Comments