தெதுறு ஓயா நீர் வழங்கல் திட்ட வேலைகள் ஆரம்பிப்பு
(ஷபீக் ஹுஸைன்)
தெதுறு ஓயா நீர் வழங்கல் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று (20) ஆரம்பித்து வைத்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தேசிய அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழ், சிறுநீரக நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டத்தின்கீழ் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் குருநாகல் மாவட்டம் – மஹவ, பொல்பிதிகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் 20,000 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவுள்ளன. இதன்மூலம் சுமார் 90,700 பயனாளிகள் நன்மையடையவுள்ளனர்.
கொரியா நாட்டின் எக்ஸிம் வங்கியின் 8,855 மில்லியன் ரூபா நிதியுதவி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 1326 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இந்த ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான கொரியா நாட்டு தூதுவர் வோன் சேன் சேங், அமைச்சர் டீ.பி. ஏக்கநாயக்க, மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், முன்னாள் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments
Post a Comment