சவூதியில் பெண்கள் தினம்
சவூதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் வரலாற்றில் முதன் முறையாகப் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ரியாத்திலுள்ள மன்னர் பஹத் கலாசார மண்டபத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் பெண்கள் தினக் கொண்டாட்டம் நாளை வரை நடைபெறவுள்ளது.
அரச குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்களும் கலந்து கொண்டிருக்கும் இக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் இளவரசி ஜொஹரா பின்த் அல் சவுத் அவர்களும் கலந்து கொண்டிருக்கிறார்.
பெண்கள் வாகனம் செலுத்துவதற்கான உரிமை, பெண் கல்வியின் மேம்பாடு, குடும்பங்களில் நிலவும் ஆணாதிக்கத்தை ஒழித்தல் மற்றும் ஆண்களின் துணையில்லாமல் பெண்கள் வெளியிடங்களுக்குச் செல்வதற்கான தடையை நீக்குதல் போன்ற பல விடயங்கள் இந்த நிகழ்வுகளில் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
தடைகள் தகருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


Comments
Post a Comment