கிண்ணியாவில் நுகர்வோர் அதிகார சபையின் ஊழியர் எனக்கூறி….

 (ihzana fareed)

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நுகர்வோர் அதிகார சபையின் உத்தியோகத்தர் எனக்கூறி அனுமதிப்பத்திரமின்றி விலைப்பட்டியலை விற்பனை செய்த நபர் ஒருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க நேற்று சனிக்கிழமை(4) உத்தரவிட்டார்.

வெளிக்குளம், வவுனியா பகுதியைச் சேர்ந் 36 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கிண்ணியா காக்காமுனைப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி நுகர்வோர் அதிகார சபையின் உத்தியோகத்தர் எனக்கூறி 800 ரூபாய்க்கு விலைப்பட்டியலை விற்பனை செய்து வந்த நிலையிலே அப்பிரதேச கடை உரிமையாளருக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து கிண்ணியா பொலிஸாருக்கு அவசர தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதையடுத்து குறித்த சந்தேக நபரை வெள்ளிக்கிழமை(3) மாலையில் கைது  செய்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments