நிபந்தனைகளின் அடிப்படையில் வன்னிக்கும் தேசியப்பட்டியல்
பிறவ்ஸ் முஹம்மட், ரிப்கான் கே.சமான் -
முசலியில் ஹக்கீம் உறுதியளிப்பு
தேசியப்பட்டியல் தொடர்பிலான வாக்குறுதிகள் தலைமையினால் நிவர்த்திசெய்யப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டாலும் இரண்டு வருடத்திற்கு நிபந்தனையின் அடிப்படையில் வன்னிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற பதவியை வழங்க தீமானித்துக்கொண்டிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முசலி பிரதேச சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையும் நிகழ்வும் 'வன்னிக்கு ஒளி' வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டத்தில் முசலி, சிலாவத்துறையில் நடைபெற்றது.
அதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது,
வன்னி பெருநிலப்பரப்புக்கு இதுவரை காலமும் இருந்துவந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தற்போது இல்லாமல்போயுள்ளது. சில நிபந்தனைகளுடன் குறைந்தது 2 வருடங்களுக்காவது வன்னி மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். தேசியப்பட்டியல் விவகாரத்தில் பல இடங்களில் பிரச்சினைகள் இருக்கின்றன. இதேவேளை, நாங்கள் வாக்குறுதியை காப்பாற்றுவதில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.
ஆனால், தலைமை கொடுக்கின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
சர்ச்சைக்குரிய முசலி கடற்படைமுகாமை அகற்றுவது தொடர்பிலும் நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். அத்துடன் முசலி பிரதேசத்துக்கு முழுமையாக குடிநீர் வழங்கும் திட்டமொன்றையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.
இத்திட்டத்துக்காக குளத்தில் நீர் எடுப்பதற்கான அனுமதியை நீர்ப்பாசன திணைக்களத்திடம் இவ்வாரத்தில் பெறவுள்ளோம்.
வடக்கு மீள்குடியேற்ற விசேட செயலணி ஆரம்பிக்கப்பட்டபோது நான் வெளிநாட்டில் இருந்த காரணத்தினால், அதில் எனது பெயர் உள்வாங்கப்படவில்லை. அதில் எனது பெயரையும் சேர்த்துக்கொள்ளுமாறு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளேன். நாளை நடைபெறும் அமைச்சரவையில் அதற்கு அனுமதி கிடைத்தவுடன், எவ்வித பாரபட்சமுமின்றி வடக்கு மீள்குடியேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன் என்று தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் உரையாற்றுகையில், மீள்குடியேறியுள்ள மக்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்படக்கூடிய ஒரேயொரு கட்சி என்ற காரணத்தினாலேயே நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளேன். அத்துடன் 'வன்னிக்கு ஒளி' வேலைத்திட்டத்தின் மூலம் இங்குள்ள மீள்குடியேற்றம், பௌதீக வசதிகள் மற்றும் கல்வி அபிவிருத்தி போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், முன்னாள் பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிபாவா பாறுக், வட மாகாணசபை உறுப்பினர் எச்.எம்.எம். றயீஸ், வடமேல் மாகாணசபை உறுப்பினர் முஹம்மட் நியாஸ், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் மாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையும் நிகழ்வும் 'வன்னிக்கு ஒளி' வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டத்தில் முசலி, சிலாவத்துறையில் நடைபெற்றது. அதில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது,
வன்னி பெருநிலப்பரப்புக்கு இதுவரை காலமும் இருந்துவந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தற்போது இல்லாமல்போயுள்ளது.
சில நிபந்தனைகளுடன் குறைந்தது 2 வருடங்களுக்காவது வன்னி மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு தீர்மானித்துக் கொண்டிருக்கிறோம். தேசியப்பட்டியல் விவகாரத்தில் பல இடங்களில் பிரச்சினைகள் இருக்கின்றன. இதேவேளை, நாங்கள் வாக்குறுதியை காப்பாற்றுவதில்லை என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால், தலைமை கொடுக்கின்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
சர்ச்சைக்குரிய முசலி கடற்படைமுகாமை அகற்றுவது தொடர்பிலும் நாங்கள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம். அத்துடன் முசலி பிரதேசத்துக்கு முழுமையாக குடிநீர் வழங்கும் திட்டமொன்றையும் விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம்.
இத்திட்டத்துக்காக குளத்தில் நீர் எடுப்பதற்கான அனுமதியை நீர்ப்பாசன திணைக்களத்திடம் இவ்வாரத்தில் பெறவுள்ளோம்.
வடக்கு மீள்குடியேற்ற விசேட செயலணி ஆரம்பிக்கப்பட்டபோது நான் வெளிநாட்டில் இருந்த காரணத்தினால், அதில் எனது பெயர் உள்வாங்கப்படவில்லை. அதில் எனது பெயரையும் சேர்த்துக்கொள்ளுமாறு அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்துள்ளேன். நாளை நடைபெறும் அமைச்சரவையில் அதற்கு அனுமதி கிடைத்தவுடன், எவ்வித பாரபட்சமுமின்றி வடக்கு மீள்குடியேற்றத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளேன் என்று தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் உரையாற்றுகையில், மீள்குடியேறியுள்ள மக்களின் நலனை கருத்திற்கொண்டு செயற்படக்கூடிய ஒரேயொரு கட்சி என்ற காரணத்தினாலேயே நான் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டுள்ளேன். அத்துடன் 'வன்னிக்கு ஒளி' வேலைத்திட்டத்தின் மூலம் இங்குள்ள மீள்குடியேற்றம், பௌதீக வசதிகள் மற்றும் கல்வி அபிவிருத்தி போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், முன்னாள் பிரதியமைச்சர் கே.ஏ. பாயிஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முத்தலிபாவா பாறுக், வட மாகாணசபை உறுப்பினர் எச்.எம்.எம். றயீஸ், வடமேல் மாகாணசபை உறுப்பினர் முஹம்மட் நியாஸ், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதித் தலைவரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன், வவுனியா மாவட்ட அமைப்பாளர் மாஹிர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Comments
Post a Comment