இல்ல விளையாட்டுப் போட்டி அல் ஹிக்மா மகா வித்தியாலயம்

தம்பலகாமம் அரபா நகர் தி/கிண்/அல் ஹிக்மா மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அரபா அல் ஹிக்மா மைதானத்தில் இன்று 28/02/2017 மிக விமர்சியாக நடைபெற்றது
சபா. மர்வா. அரபா என மூன்று இல்லங்கள் போட்டியிட்டன. இவ் இல்ல விளையாட்டுப் போட்டிக்கு .தலைமை அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திச் சங்க தலைவருமான அப்துல்லாஹ் மகரூப் மற்றும் பிரதம அதிதிகளாக கிண்ணியா வலயக் கல்வி பணிப்பாளார் அஹமட் லெப்பை தம்பலகாம பிரதேச செயலாளர் சிறிபதி தம்பலகாம பிரதேச முன்னாள் தலைவர் தாலிப் அலி அவர்களும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் உட்பட மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் "மர்வா" இல்லம் வெற்றியீட்டியது



Comments
Post a Comment