மகிந்த – அதாவுல்லா விசேட சந்திப்பு!


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம் அதாவுல்லாவுக்குமிடையிலான ஒரு விசேட சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக நம்பகரமாக அறிய முடிகின்றது.

இச்சந்திப்பு கொழும்பு – 07 இல் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

நல்லாட்சியில் முஸ்லிம் சமுகம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்டு வரும் இந்நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பித்தக்கது.

இச்சந்திப்பில் எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பில் தகவல்கள் கிடைக்கவில்லை.

Comments