ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்ற சேவைகளில் தலையீடு செய்துள்ளதாக தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனால் நீதிமன்ற சேவையின் சுயாதீன தன்மையை கேள்விக்குறியாகியுள்ளார். இதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களிடத்தில் மன்னிப்பு கோர வேண்டும்.அவ்வாறு இல்லாவிடின் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பில் சேவையாற்றி வந்த இராமநாதன் கண்ணண் என்ற சட்டத்தரணியை ஜனவரி 31 ஆம் திகதியன்று பிரதம நீதியரசராக நியமித்து முழு சட்டத்துறையினையும் தளம்பலடையச் செய்துள்ளார்.
மேற்படி இராமநாதன் கண்ணன் என்பவர் இவர் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் உயர் நீதியரசர்களுக்கான தேர்வுகளில் சித்தியடையவில்லை. அந்த பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் தற்போதும் நீதிவான்களாக சேவையாற்றுகின்றனர். சித்தியடையாதாவர் மேல் நீதிமன்ற பதவியில் அரசியல் தலையீட்டுடன் நியமிக்கப்படுகின்றார்.
அதனால் ஏனைய சட்டத்துறையின் சேவையாற்றும் அதிகாரிகளும் அரசியல் வாதிகளின் பின்னால் செல்ல ஆரம்பிப்பார்கள்.மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கவும் மாட்டார்கள். இது எவ்வாறிருப்பினும் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் கோரிக்கையின் பிரகாரமே இந்த நியமனம் வழங்கப்பட்டது என்று ஜனாதிபதி கூறுகிறார்.
சட்டத்தரணிகள் சங்கம் தாம் அவ்வாறான ஒரு கோரிக்கையினை ஒருபோதும் விடுக்கவில்லை என்று கூறுகின்றது. தற்போது நீதி அமைச்சர் தன்னிடத்தில் ஒரு அரசியல் கட்சி, குறித்த சட்டத்தரணியை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டும் என கோரி ஒரு அரசியல் கட்சி எனக்கு கோரிக்கை விடுத்தது என்றும் எனினும் ஆனால் அந்த கோரிக்கைக்கு தான் இணங்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே அமைச்சர்களும் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதியும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை தெரிவு செய்வார்களாயின் 19 ஆவது திருத்தத்தில் கொண்டுவரப்பட்ட நீதி சேவைகளுக்கான சுயாதீன ஆணைக்குழு எங்கு சென்றது. அரசியலமைப்பின் 111 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நியமனப் பத்திரத்தில் கைச்சாத்திடக்கூடிய அதிகாரம் மாத்திரமே உள்ளது.
அதேநேரம் இந்த பதவிக்கு தெரிவாகின்றவர்கள் மாவட்ட நீதிவான்களாக அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றியவர்களாக இருக்க வேண்டும். அதனால் சட்டமா அதிபரிடத்திலும் இது குறித்து ஆலோசிக்கப்படும். எவ்வாறாயினும் ஜனாதிபதியின் கூற்றில் உண்மையிருந்தாலும் அவர் தன்னிடத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுத்திருக்க வேண்டும்.
ஆனால் தேசத்தின் துரதிர்ஷ்டம் காரணமாக அவ்வாறு நடக்கவில்லை. ஆனால் இந்த சட்டத்தரணி இராமநாதன் கண்ணண் என்பவரின் நியமனத்தில் கடுமையான குற்றங்கள் நான்கு உள்ளன. முதலாவது தவறாக மேல் நீதிமன்ற நீதிபதி உட்பட சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளை சேர்ந்து முன்னெடுக்க வேண்டிய ஒரு செயற்பாட்டில் ஜனாதிபதி தலையீடு செய்துள்ளார்இ இரண்டாவது தவறு அரசியல்வாதி ஒருவரினால் சட்டத்துறையின் சேவையாளர் ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. நாங்கள் பத்து வருட ஆட்சியில் என்றும் அவ்வாறு செய்யவில்லை அந்த காலசாரம் தற்போது தான் ஆரம்பிக்கின்றது. இதில் மூன்றாம் தவறு பரீட்சையில் சித்திபெறாத ஒருவரை உயர் பதவி ஒன்றில் அமர்த்தி பரீட்சையில் சித்தியடைந்த சட்டத்துறையை சார்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால செய்த தவறை ஏற்றுகொண்டு இனி இந்த தவறை செய்யப்போவதில்லை என்று நாட்டு மக்களிடத்தில் மன்னிப்பு கோர வேண்டும் இல்லாவிட்டால் இது ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் ஒரு தவறாக மாறிவிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment