அநுரவின் விளக்கமறியல் நீடிப்பு.!
றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடினின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க மற்றும் நாரஹேன்பிட பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சுமித் பெரேரா ஆகியோர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை பெப்ரவரி 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
இன்று குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment