சுதந்திர தினத்தின் அர்தத்தை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் !
சுதந்திர தினத்தின் அர்தத்தை அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
2017 பெப்ரவரி 04ம் திகதி இலங்கையர்களான நாங்கள் அடிபனிந்து இருந்த நிர்வாகத்தில் இருந்து சுதந்திரமடைந்து 69 வது ஆண்டை கொண்டாடவுள்ளோம்.
இளைய தலைமுறையினருக்கு நம்முடைய சுதந்திரத்தினதும் இறையாண்மையினதும் முக்கியத்துவத்தின் அர்தத்தை எடுத்துக் கூறுவதை விட, எமது அரசியல் தலைவர்களுக்கூ நம்முடைய சுதந்திரத்தினதும் இறையாண்மையினதும் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதே இன்று முக்கியமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
நாம் 69வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது, 70 வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு நாடு எஞ்சியிருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையிலேயே என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
தற்போதைய அரசியல் தலைவர்கள் இலங்கை நாட்டை துண்டாக்கி, பொலிஸ் சேவையுடனான தனியான பிராந்தித்தை உருவாக்குவதற்கு முயற்சிப்பதை நாங்கள் காண்கிறோம்.
இந்த சுதந்திர தினத்தில், எமது இளைஞர் சமுதாயத்தை விட எமது நிர்வாகிகளிடம் சுதந்திரத்தின், இறையாண்மையின், விடுதலையின் முக்கியத்துவத்தை காண வேண்டும் என்று பிரார்த்திப்பதாக மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறியுள்ளார்.


Comments
Post a Comment