வித்யா கொலை வழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு.!
யாழ் புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் 9 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியனினால் சந்தேகநபர்களின் விளக்கமறியல் இன்று மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சந்தேகநபர்கள் 9 பேரும் எதிர்வரும் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த வருடம் மே மாதம் கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment