கிழக்கு மாகாண அமைப்பாளராக இம்ரான் நியமனம்

(ihzana fareed)

கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் பிர­தே­சங்­க­ளுக்­கான ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைப்­பா­ள­ராக திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

கிழக்கு மாகா­ணத்தில் ஐக்­கிய தேசிய கட்சி ஆத­ர­வா­ளர்­களை ஒருங்­கி­ணைத்து கட்­சியை மீளவும் கட்­டி­யெ­ழுப்­பு­வது தொடர்­பான கூட்­ட­மொன்று கடந்த வெள்­ளிக்­கி­ழமை கட்­சியின் செய­லாளர் கபீர் ஹாஷிம் தலை­மையில் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தவில் இடம்­பெற்­றது.

இக்­கூட்­டத்தில் கிழக்­கு­ மா­கான ஐக்­கி­ய­தே­சியக் கட்சி முக்­கி­யஸ்­தர்கள், செயற்­பாட்­டா­ளர்கள் கலந்­து­கொண்­டனர்

இக்­கூட்­டத்தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களின் அடிப்­ப­டையில் கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் பிர­தே­சங்­களின் அமைப்­பா­ள­ராக திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் ஏக­ம­ன­தாகத் தெரிவு செய்­யப்­பட்டார். இவர் ஏற்­க­னவே திரு­கோ­ண­மலை மாவட்ட தவி­சா­ள­ரா­கவும் முதூர், திரு­கோ­ண­மலை தொகுதி அமைப்­பா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றி­ வ­ரு­கின்றார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது

அத்­துடன் கிழக்­கு ­மா­காண மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஆராய சிறி­கொத்­தாவில் அலு­வ­லகம் ஒன்றை அமைத்து அவ்­வ­லு­வ­ல­கத்தின் ஊடாக கிழக்கு மக்­களின் பிரச்சி­னை­க­ளுக்­கான தீர்­வு­களை பெற்­று­கொ­டுப்­பது எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இதற்­கான உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரும் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். 

இதே­வேளை, இதன் முதற்­கட்­ட­மாக அம்­பாறை மாவட்ட முஸ்லிம் பிர­தே­சங்­களின் ஐக்­கிய தேசியக்­கட்­சியின் அமைப்பாளர்களுடனான சந்திப்பொன்றும் கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்றது.

இதில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஜெய்னுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Comments