ஓட்டமாவடியில் கல்குடா விவசாய சமூகம் நெல் விலை நிர்ணய கோரிக்கையினை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம்

(ihzana fareed)

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதி கோறளைப்பற்று வாழைச்சேனை, கோறளைப்பற்று தெற்கு கிரான், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி, கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை, கோறளைப்பற்று வடக்கு வாகரை ஆகிய பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட்ட  கல்குடா தொகுதி விவசாய சமூகமானது எதிர்கொள்ளும் அறுவடை செய்யப்பட்ட நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயத்தினை  வலியுறுத்தியும், அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அறுவடை செய்யப்பட்ட நெல்லினை கொள்வனவு செய்வதில் இருக்கின்ற தாமதங்கள் நிவர்த்தி செய்து தருமாறும் கோரிக்கைகளை முன்வைத்து நாளை செவ்வாய்க்கிழமை 14.02.2017 ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்னாள் இருந்து கண்டன பேரணி இடம் பெற இருப்பதாக அறியக்கிடைக்கின்றது.
மேலும் குறித்த கண்ட பேரணி சம்பந்தமான உண்மை நிலைமையினை அறிந்து கொள்ளும் பொருட்டு 24 விவசாய அமைப்புக்களில் ஒன்றான கல்குடா பட்டியடிவெளி-வகுளாவளை விவசாய சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.எம்.பசீரினை நேரடியாக சந்தித்து வினவிய பொழுது நாளை 14.02.2017 காலை 8மணிக்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்னாள் இருந்து ஆரம்பமாகும் கண்டன பேரணியானது விவாசய சங்கங்களின் ஒருமித்த கோரிக்கை அடங்கலான மகஜர்களை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளதாகவும் அதற்காக எல்லா விவசாய அமைப்புக்களையும், அனைத்து விவசாயிகளையும் பங்குபற்றுமாறு திறந்த அழைப்பினை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

Comments