திருகோணமலை: விபத்தில் நான்கு பேர் வைத்தியசாலையில்
(IHZANA FAREED)
திருகோணமலை நகர் பகுதிகளில் இடம் பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் நேற்றிரவு (08) திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியால் பயணித்துக்கொண்டிருந்த உளநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை வருவதுடன் பெண்ணின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இவ்விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் சாரதியான திருகோணமலை.நீதிமன்ற வீதி.01வது ஒழுங்கை பகுதியைச்சேர்ந்த எம்.ஏ.எம்.ஹயர்தீன் (25வயது) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை இலிங்க நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் விழுந்ததில் மோட்டார் சைக்கிள் சாரதியான கே.தனூஷன் (20வயது) படுகாயமடைந்துள்ளார்.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் முற்சக்கர வண்டிக்கு குறுக்கே போட்டமையினால் முற்சக்கர வண்டி புரண்டதில் சாரதியான மட்கோ.முஹம்மதிய்யா நகர்.எம்.எஸ்.எம்.பரீட் (50வயது) படுகாயமடைந்துள்ளார்.
கன்னியா.மாங்காயூற்று பகுதியைச்சேர்ந்த எஸ்.சுதாகரன் (07வயது) தனது வீட்டுக்கு முன்னால் நின்று கொண்டிருந்த வேளை முற்சக்கர வண்டி மோதியதில் படுகாயமடைந்துள்ளதுடன் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துக்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Post a Comment