ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் பதிவேற்றப்படுவதை தடுக்க இயலாது - கூகுள் பகிரங்க அறிவிப்பு
ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்க இயலாது என்றும் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்தையும் கண்காணிக்க வேண்டுமென்றால் லட்சக்கணக்கான ஊழியர்கள் தேவைப்படுவார்கள் என கூகுள் உட்பட பல தேடுதல் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் திகதி உச்சநீதிமன்றம் பாலியல் தொடர்பான பல்வேறு தகவல்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் அதற்கு ஏற்ற வகையில் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் படி கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட தேடு தளங்களுக்கும், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில்(இந்தியா) நீதிபதி உதய் லலித், மதன் லோகுர் ஆகியோரின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அதில், தேடுதளங்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இணையதளத்தில் பாலியல் ரீதியான ஆபாச வீடியோக்களையும், விஷயங்களையும் பதிவேற்றம் செய்வதை தடுக்க இயலாது என தெரிவித்துள்ளனர்.
யூடியூபில் 1 நிமிடத்திற்கு நன்கரை மணி நேர வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அனைத்தையும் கண்காணித்து தணிக்கை செய்ய லட்சக்கணக்கான ஊழியர்கள் தேவை. அது சாத்தியமில்லா விஷயம் என கூறியுள்ளது.


Comments
Post a Comment