பொதுமக்களின் பாவனைக்காக தனது சொந்த நிதியிலிருந்து தற்காலிகமாக வீதியினை புனரபை்பு செய்தார் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்
எம்.ரீ. ஹைதர் அலி
மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்பட்ட ஹைராத் நகர் உள்ளக வீதிகளை புனரமைப்பு செய்து தருமாறு பொதுமக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தனர்.
பொதுமக்களின் அழைப்பினையேற்று இவ்வீதியினை பார்வையிடுவதற்காக அன்மையில் குறித்த பகுதிக்கு விஜயம்செய்து பார்வையிட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தனது சொந்த நிதியிலிருந்து குறித்த உள்ளக வீதியினை தற்காலிகமாக புனரமைப்பு செய்வதற்குரிய நடவடிக்களை மேற்கொண்டார்.
ஆரயம்பதி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட இவ்வீதியானது மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலை காணப்படுவதோடு மழை காலங்களில் அதிகளவான வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக இவ்வீதியினூடாக பயணிக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். அத்தோடு, மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்லமுடியாத ஒரு நிலையும் காணப்படுகின்றது.
மிகவும் முன்னுரிமைப்படுத்தி அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய இவ்வீதியானது இதுவரை காலமும் அபிவிருத்தி செய்யப்படாமல் கவனிப்பாரற்று இருந்த நிலையில் பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக உடனடியாக புனரமைப்பு செய்வதற்கான முயற்சிகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கொண்ட போதிலும் அரசாங்கத்தினூடாக உடனடியாக இவ்வீதியினை புனரமைப்பு செய்ய முடியாத காரணத்தினால் தனது சொந்த நிதியில் தற்போது இவ்வீதிகளை தற்காலிகமாக புனரமைப்பு செய்து பொதுமக்களின் பாவனைக்காக வழங்கியுள்ளார்.

Comments
Post a Comment