Skip to main content
இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் உதவுங்கள்!

புறகஹதெனிய, சிங்ஹபுரயைச் சேர்ந்த 26 வயதுடைய சகோதரன் முஹம்மத் ஹுஸ்ரி தம் பித்தப்பையில் ஏற்பட்டுள்ள புற்றுநோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தந்தையை இழந்த வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.
எமது நாட்டு வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பிரகாரம் இச்சகோதரனை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று இந்நோயை குணப்படுத்துவதற்கான முயற்சிகளில் இவரது குடும்பத்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக மொத்தமாக 30 இலட்சம் ரூபா செலவாகும் என வைத்திய நிலையத்தினால் வழங்கப்பட்ட ஆவணங்கள் ஊடாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் குறித்த தொகையைத் திரட்டிக்கொள்ளும் போதிய வசதியின்மையால் உதவ மனம் படைத்தவர்களிடமிருந்து நிதியுதவியை எதிர்பார்க்கின்றனர் குடும்பத்தினர்.வங்கிக் கணக்கு விபரம்:
எம். ஆர். எம். நசார், கொமசல் வங்கிசேவிங் கணக்கு இலக்கம் 8640029710நோயாளியின் சகோதரன் முஹமட் ஜஷீர் 0775899433
நோயாளியின் சாச்சா எம். ஆர், எம். நசார் 0777067343
-இக்பால் அலிஎமது பிரதிநிதியூடாக மருத்துவ அறிக்கைகள் பெறப்பட்டதன் அடிப்படையில் இச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை மேற்காணும் தொடர்பிலக்கங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள்.
x
Comments
Post a Comment