முகா தலைமைக்கு தகுதியானவர் யார்?
(Ahamed Furhan - Kalmunai)
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை தலைமைத்துவத்தில் இருந்து நீக்கினால் அல்லது பதவி விலகினால் அதற்கு தகுதியானவர் யார்??? என்று கேட்கிறார்கள்.
1984 களுக்கு முன்னர் மர்ஹூம் அஷ்ரப் யார் என்று யாருக்காவது தெரியுமா?
நிச்சயமாக இல்லை. அப்படி யாருக்காவது தெரியுமாக இருந்திருந்தால் “உசைன் விதானையின் மகன் அல்லது சட்டத்தரணி என்றுதான் கூறுவார்கள். யாரும் மு.கா தலைவர் என்று கூறியிருக்க மாட்டார்கள்.
நான் கேட்கிறேன் அஷ்ரப் மரணிப்பதற்கு முன்னர் அவர் உயிரோடு இருந்த காலங்களில் இந்த ரவூப் ஹக்கீம் முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த தலைவர் இவர்தான் என்றாவது கூறிய வரலாற்று சான்று ஏதாவது உள்ளதா?
இல்லை அடுத்த மு.கா தலைவர் ஹக்கீம் தான் என்று அவரை “பென்டிங்கில்” வைத்தோமா?
தலைவன் என்பவன் யார்?
அவன் எப்படி வருவான்?
யார் அந்த தலைவன்? என்பதல்லாம் கேள்விகள் இல்லை,
தலைவன் இருக்கிறான் அவன் நமக்குள் ஒருவனாக வாழ்கிறான், உரிய நேரம் வரும் போது அவன் வெளிவருவான்.
அவன்தான் யார்? என்று மீண்டும் முட்டாள் தனமாக கேட்க வேண்டாம்.
ஒருவேளை சகோதரர் ஹக்கீம் மரணித்தால் வேறு தலைவனே இல்லையா? அல்லது வரமாட்டானா? இல்லை கட்சியை கலைத்து விடுவீர்களா?
எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் அதிகாரம் இல்லாத நாம் எதிர்காலத்தில் நடக்க விருப்பதை யூகத்தின் அடிப்படையில் கூறுவது ஒரு போதும் எதார்த்தமாகாது.
பல தலைவர்களை நாம் கண்டுவிட்டோம் அப்படியானவர்களில் ஒருவர்தான் அந்த அஷ்ரப்பும் இந்த ரவூப் ஹக்கீமும்!

Comments
Post a Comment