மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிரடியான புது திட்டம்!
மோட்டார் வாகனங்களின் தொழில்பாட்டை இனி ‘ஈ மொணிற்றரிங்’ என அழைக்கப்படும் கணனி மூலமான பரிவர்தனை மூலம் மேற்கொள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த புதிய முறைமைக்கு அமைய வாகனம் ஒன்றை பெறுபவர்கள் அதனை பதிவு செய்வதற்கு திணைக்களத்திற்கு வருகை தர வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜயத் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த முறைமை தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்துடன் பரீட்சார்த்த வகையில் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார்.
திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் துறைமுகத்தில், நுகர்வோருக்கான உதவிகளை வழங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனத்தை வாங்கும் உரிமையாளர் வாகனம் தொடர்பான விபரங்கள், அதற்கான உதிரிப்பாகங்கள் போன்றவற்றை வெளிப்படுத்தும் பாரத்தை பூர்த்தி செய்து கணனி பரிவர்தனை மூலம் பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறை மூலம் திணைக்களத்திற்கு வருகை தரும் மக்களின் தொகையினை கணிசமாக மட்டுப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டினார்.
அடுத்த வருடம் முதல் வாகன பதிவு ஆவணங்களில், உரிமையாளர் மற்றும் வாகனத்தை வாங்குபவர்களின் புகைப்படங்களும் இணைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment