கந்தளாய் கிராமத்தில் பிறந்த சாலிகு ஆமினா டீச்சரின் அற்புத ஆளுமை பாராட்டத் தக்கது....
நன்றி (கிண்ணியா குரல்)
இவர் பெயர் ஆமினா சாலிகு.....கந்தளாய் கிராமமாக இருந்த காலத்தில் பிறந்தவர் ....தகப்பன் தையூப் மஜீத் ....தாயார் காத்தூண் பீபி ...உடன் பிறந்தோர் 07 பேர் ....1952 ம் ஆண்டு பேராற்றுவெளி முஸ்லிம் வித்தியாலயத்தில் இருந்து 5 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சசைக்கு தோற்றுகின்றார் ...சாய்ந்தமருதைச் சேர்ந்த அய்யூப் ஆசிரியர் இந்தப் பிள்ளை சித்தியடையும் என்று முழுமையாக பரீட்சைக்கு தயார் படுத்தினார்,,,,,காத்தான்குடியை சேர்ந்த தாஸிம் மெளலவி துணை புரிகின்றார் ......
பரீட்சைக்கு திருகோணமலை நகரத்திற்கு முதன் முதலாக சென்றதையும் .பெருங்கடலை கண்டதையும் மகிழ்ச்சியோடு நினைவு கூறுகின்றார் ......
1952 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைகின்றார் ....
ஊர்கூடி விழா எடுத்து கொண்டாடுகின்றார்கள் ...ஒரு வரலாற்றை படைக்கின்றார் ....
ஏழ்மையான விவசாயியான தந்தை மகளின் எதிர்காலம் தொடர்பில் கவலையோடு இருந்த வேளை தாஸிம் மெளலவி காத்தான்குடி மத்திய கல்லூரியில் அந்தப் பிள்ளையை பலரின் பெண் பிள்ளை கற்பதா ? என்னும் கேலி ,எதிர்ப்பு ,மத்தியில் கொண்டு சேர்க்கின்றார் .......தாஸிம் மெளலவி தனது வீட்டிலேயே தங்க வைக்கின்றார் .....
அடுத்த சிக்கல் அந்நிய பெண் பிள்ளையை தங்க வைப்பதா ?? அப்போது பாடசாலை தோழி லீலா கைகொடுக்கின்றார் .
ஆரயம்பதியை சேர்ந்த இவரின் வீட்டிலேயே ஆமினா தங்கி க.பொ.த ( சாதாரண ) தரம் வரை கற்று மிக திறமையான சித்தி பெறுகின்றார் ....
தனது பள்ளித் தோழர்களான மூதூர் சதக்கு சேர் ,அஸ்ரப் சேர் ....அரசரட்ணம் ..மஜீத் (ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி )காதர் முகைதீன் (முன்னாள் செயலாளர் ) என்று பலரை நினைவோடு பேசுகின்றார் ....இற்றை வரைக்கும் லீலா வை நினைவு வைத்து பேசுகின்றார் ...அப்படியொரு தோழமை போல ......
பரீட்சசையில் மிக திறமையாக சித்தி பெற்றாலும் உயர் கல்வி தொடர்பில் நினைத்துப் பார்க்க முடியாத நிலை .......
அந்த காலகட்டத்தில் முஸ்லிம் பெண்கள் கற்க வேண்டும் என செயற்பட்டு வந்த W .தகநாயக்க இவரை தேடிப்பிடித்து ஆசிரியர் தொழிலை வழங்குகின்றார் ....இதில் விசேஷம் என்னவென்றால் 18 வயது அடைய மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் ஆசிரியத் தொழில் இவருக்கு 16 .04 .1959 இல் வழங்கப்படுகின்றது.......முதல் நியமனம் பேராற்றுவெளி முஸ்லிம் வித்யாயாலயத்தில் ......இவரோடு சேர்த்து இன்னுமொரு திருகோணமலை நகரத்தை சேர்ந்த முஸ்லிம் பெண் ஆசிரியரை சொல்கின்றார் இவர்கள்தான் திருகோணமலை மாவட்ட முதல் முஸ்லிம் பெண் ஆசிரியைகள் .....
அதே வருடம் 11 ம் மாதம் கிண்ணியாவை சேர்ந்த வசூர் லெப்பை .சாலிகு என்னும் சக ஆசிரியரை திருமணம் செய்கிறார் ........மூன்று ஆண் பிள்ளைகள் ..இரண்டு பெண் பிள்ளைகள் .....
அவர் பாடசாலையில் எல்லோரையும் தன்பிள்ளைகள் போல பார்த்தமையால் பிள்ளைகள் நல்ல நிலைமையில் உள்ளார்கள் .....
கிண்ணியா மகளிர் கல்லூரியில் 1965 ..1966 ஆண்டு காலப்பகுதியில் பதில் அதிபராக கடமை ஆற்றியுள்ளார் .....அந்த காலகட்டத்தில் மஜீத் எம்பியும் ,அலி எம்பியும் அதிகாரத்தில் இருந்த காலம் ......இருவரினதும் கனவான் தனமான அரசியலை நினைவு கூறுகின்றார் .....ஏதாவது தேவைக்கு அவர்களிடம் நீங்கள் போயிருக்கிண்றீர்களா? என்னும் கேள்வியை கேட்ட போது....இல்லை அவர்கள்தான் பாடசாலைக்கு வருவார்கள் என்கின்றார் ....இருவரும் பல நிகழ்வுளில் ஒன்றாக கலந்துகொண்டதை நினைவு கூறுகின்றார் .......
15 .01 .1975 அன்று அதிபர் பதவிக்கு உயர்த்தப் படுகின்றார் ..முதலாவது முஸ்லிம் பெண் அதிபர் கெளரவம் பெறுகின்றார் ...
01 .09 .1989 இரண்டாம் தர அதிபர் ...
01 ,06 .1996 முதலாம் தர அதிபர் .....
23 .02 .2000 ம் அன்று தனது 41 வருட ஆசிரிய சேவையில் இருந்து ஓய்வு பெறுகின்றார் ......
எத்தனையோ ...எத்தனையோ ,,,நினைவுகளை தொடர்ச்சியாக கூறுகின்றார் ..பல நேரங்களில் நெகிழ்ந்தும்...சிரித்தும்..கூறுகின்றார் ...
பல விடயங்கள் இருந்தாலும் ....சுருக்க வேண்டியுள்ளது ..
இன்று இந்த பதிவிற்கு ஒரு முக்கியத்துவம் உள்ளது .....இன்று 23 .02 .2017 அன்று அந்த உன்னத தாய்க்கு 75 வயது ...அவர் பிறந்தது 23 .02 .1942 ......
இவரை கெளரவித்து கந்தளாய் மக்கள்ம களிர் பாடசாலையை அமைத்து "ஆமினா வித்தியாலயம்" என பெயர் வைக்க முயற்சி செய்த போது அதனை மறுத்து "ஆயிஷா வித்தியாலயம்" என பெயர் சூட்டியவர்.
இவர்களுக்கு சாலிகு ஆமினா ஆசிரியர்கள் சார்பில் எங்கள் கந்தளாய் பிரதேச மக்கள் சார்பாகவும் , கந்தளாய் நியூஸ் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், நீண்ட ஆயுலுக்கும் ஏக வல்ல அல்லாஹ் வை வேண்டிக் கொள்கிறோம்.

Comments
Post a Comment