உயர்தர மாணவர்களே! சில டியுட்டரி ஆசிரியர்கள் சுயநலத்தில் விழ வேண்டாம்!


உயர்தர மாணவர்களே

நீங்கள் உயர்தரத்தில் எந்த துறையை தெரிவுச்செய்ய வேண்டும் மற்றும் எந்த பாடத்தை தெரிவுச்செய்ய வேண்டும் என்பதனை நன்று  ஆராய்ந்து முடிவு எடுங்கள்.. சில மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் பணம் சம்பாதிக்க உங்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதாக எமது லங்காபுரியின் மாணவர் மட்டும் பகுதிக்கு  தகவல் கிடைத்துள்ளது.

குறிப்பாக உயர்தரம் உங்களது வாழ்க்கையை தீர்மானிக்கின்ற முக்கிய பகுதியாகும். சில மேலதிக வகுப்பு ஆசிரியர்கள் தன்னுடைய மேலதிக வகுப்பின் மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க மாணவர்களை வற்புறுத்தி தவறான ஆசை வார்த்தைகளை காட்டி மாணவர்களை உள்ளீர்கின்றார்கள்..

மாணவர்களின்  எதிர்காலம் குறித்து உண்மையில் அக்கரை இல்லை.. பணத்திற்காக மாத்திரமே இவ்வாறு சில ஆசிரியர்கள் செயற்படுகின்றார்கள்..

இனிவரும் இலங்கையின் தொழிற்துறையானது மிகவும் இக்கட்டான கட்டத்தினை அடைந்துள்ளது.

ஆகவே தொழிற்கல்வியினை மையப்படுத்தியதாக உங்களது  உயர்கல்வி அமையும் பட்சத்தில் மாத்திரமே இலகுவாக தொழில்வாய்ப்புக்களை பெற முடியும்..தற்போது பல்கலைகழகத்தில் இருந்து வெளியேறியுள்ள மாணவர்களிடத்தில் நீங்கள் விசாரித்தால் பல உண்மைகள் தெரியவரும்..

சுயநல ஆசிரியர்களின் ஆசை வார்த்தைகளில் விழ வேண்டாம்.. உங்களது உயர்தர தெரிவே உங்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும்..

மேலதிக வகுப்பு ஆசிரியர்களே…(குறிப்பிட்ட சிலர்)

திறமையான மாணவர்களை சரியான முறையில் வழிகாட்டுங்கள்… தொழில்கல்வியினை மையப்படுத்தி அவர்களிது உயர்தர பாடத்தெரிவு அமையட்டும்…ஏமாற்ற வேண்டாம்.. உங்களது மேலதிக வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க அப்பாவி மாணவர்களை பயன்படுத்த வேண்டாம்…. ஆதாரங்களை சேகரித்துக்கொண்டிருக்கின்றான்  லங்காபுரி ராவணன் சிக்கிக்கொள்ள வேண்டாம்……..

இந்த கட்டுரை தொடர்பான உங்களது கருத்து சுதந்திரத்தினை comments செய்யவும்…

கருத்து சுதந்திரத்தை தவறான வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்ய வேண்டாம்…

Comments