பிரபல ஹோட்டலுக்குள் அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மோதல்!


அரசாங்க பிரபுக்களுக்கு நெருங்கிய உறவினர்களான இரண்டு இளைஞர்கள் தாக்குதல்களில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறித்த இருவரும் கொழும்பில் உள்ள ஆடம்பர ஹோட்டல்களில் வைத்து தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் வைத்து அரசின் முக்கியப் புள்ளிக்கு நெருங்கிய இளைஞர், மற்றுமொரு இளைஞரை இன்று அதிகாலை 1 மணியளவில் தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் போது அரசியல்வாதி ஒருவரின் சகோதரனின் மகனே தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டதை அடுத்து குறித்த இளைஞரை கொழும்பு கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்பின்பு அதிகாரம் மிக்க அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை மருதானையில் உள்ள இரவு விடுதியில் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மகன் இரண்டு பெண்களை தாக்கியுள்ளதாக மற்றுமொரு தாக்குதல் சம்பவமும் பதிவாகியுள்ளது, இந்த சம்பவமும் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் காயமடைந்துள்ளதோடு, தாக்குதலுக்கு இலக்கான பெண்களில் ஒருவர் முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தங்கையின் மகள் என தெரியவந்துள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் எந்த பொலிஸ் விசாரணைகளும் முன்னெடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments