பரீட்சை திணைக்களம் மூலம் மத்ரஸா மாணவர்களுக்கு பரீட்சைகள் :விரைவில் சட்டமூலம்


நாட்­டி­லுள்ள பதிவு செய்­யப்­பட்­டுள்ள மத்­ர­ஸாக்கள் அனைத்­திலும் ஒரே பாடத்­திட்டம் பின்­பற்­றப்­பட்டு அந்தப் பாடத் திட்­டத்­தின்­படி மௌலவி பரீட்­சையை பரீட்­சைகள் திணைக்­களம் நடத்தும் வகையில் சட்ட மூல­மொன்று முஸ்லிம் சமய மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்­ச­ரினால் தயா­ரிக்­கப்­பட்டு பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் இது தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்­களை உல­மாக்கள் மற்றும் புத்­தி­ஜீ­வி­க­ளுடன் நடத்தி வரு­கிறார்.

இது தொடர்பில் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் கருத்து வெளி­யி­டு­கையில்.

தற்­போது நாட்­டி­லுள்ள மத்­ர­ஸாக்கள் அனைத்­திலும் மௌலவி பரீட்­சைக்கு ஒரே மாதி­ரி­யான பாடத்­திட்டம் பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை. எனவே, மத்­ர­ஸாக்­களின் கல்வித் திட்­டத்தை ஒன்­றி­ணைக்க வேண்­டிய தேவைப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

இப்­ப­ரீட்சை, பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் மூலம் நடத்­தப்­பட்டால் சர்­வ­தேச ரீதியில் அங்­கீ­கா­ரத்­தையும் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும். அர­சாங்க பரீட்சைத் திணைக்­களம் நடத்தும் இந்தப் பரீட்­சையில் சித்­தி­ய­டை­ப­வர்­க­ளுக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் சான்­றிதழ் ஒன்றும் வழங்கும் வகையில் சட்ட மூலம் தயா­ரிக்­கப்­படும் என்றார்.

அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையும் மத்­ர­ஸாக்கள் அனைத்­தி­னதும் பாடத் திட்­டங்கள் ஒரே வகையில் அமைய வேண்டும்.

ஒரே தரத்­தினைக் கொண்­ட­தாக இருக்க வேண்டும் என நீண்­ட­கா­ல­மாகக் கோரிக்கை விடுத்துவந்துள்ளதாக அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்தார்.

Comments