பட்டதாரிகள் நியமனம் வழங்கும் நிகழ்வினை லாஹிர் பகிஷ்கரிப்பு
கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் கிழக்கு மாகாண மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பாடசாலை ரீதியாக இலங்கை ஆசிரியர் சேவை,தரம் 3-i (அ)க்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக 222 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கல்வியமைச்சின் செயலாளர் ஏ.டபிள்யு.ஜி. அசங்க அபேவர்த்தன தலைமையில் இன்று (20) காலை திருகோணமலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஜே.எம். லாகீர் அதிர்ப்திருத்தியை வெளிப்படுத்தி நிகழ்வுக்கு செல்லாமல் பகிஷ்கரித்ததுடன் அவரது ஆட்சேவித்தற்க்கான காரணத்தை தெரிவிக்கையில் கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக நிலவும் 1134 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்காக 2016.10.22 ம் திகதி அன்று போட்டி பரீட்சை நடைபெற்றது. இதற்க்கு 5701 பட்டதாரிகள் மேற்படி பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.
நுண்ணறிவு மற்றும் பொதுஅறிவு என்ற அடிப்படையில் நடைபெற்ற மேற்படி போட்டிப்பரீட்ச்சையில் பொதுஅறிவு வினாத்தாள் வரத்தமானி அறிவித்தலுக்கு முற்றிலும் மாற்றமாக நடைபெற்றதனால் பரீட்சாத்திகளுக்கு மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது, இதனை தொடர்ந்து மீண்டும் 2016.11.27 அன்று பொது அறிவுப் பரீட்சை மாத்திரம் நடாத்தப்பட்டது.
பொதுவான கருத்தின் பிரகாரம் மேற்படி (மீள்) பொது அறிவு வினாப்பத்திர வினாக்கள் அதிக கடினத்தன்மையை கொண்டிருந்ததால், இதனை தோற்றிய 5701 பரீட்சாத்திகளுள் 305 பேர் மாத்திரம் சித்தியடைந்துள்ளமையானது> பரீட்சையின் கடினத்தன்மையை நிரூபிக்கின்றது. குறிப்பாக அதிகமான பரீட்சாத்திகள் பொது அறிவுப் பத்திரத்தில் 40 க்கு குறைவான புள்ளிகளை பெற்றுள்ளனர்.
இதில் திருத்தங்களை கொண்டுவருவதற்காக 72வது கிழக்கு மாகாண சபை அமர்வில் குறித்த விடயம் தொடர்பாக பல மாகாண சபை உறுப்பினர்கள் நியமங்களை வழங்குகின்ற போது புள்ளிகளை குறைத்து நியமனங்களை வழங்க வேண்டும் என்று குரல் கொடுத்தும் வீணாகிவிட்டதுடன் சித்தியடைந்த பரீட்சாத்திகளில் நேர்முகப்பரீட்சையிலும் குறைக்கப்பட்டதையிட்டும் ஆட்சேவித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜே.எம்.லாகீர் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரிக்கின்றேன் என்று குறிப்பிட்டார்.

Comments
Post a Comment