சுதந்திர தின வாரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சான்றிதழ்!
சுதந்திர வாரத்தில் பிறந்த குழந்தைக்கு மக்கள் வங்கியினால் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
69 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, பெப்பிரவரி மாதம் 01-ம் திகதி தொடக்கம் 7-ம் திகதி வரை பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தலா ரூபா 500- பெறுமதியான “இசுறு உதான” பரிசுச்சான்றிதழினை மக்கள் வங்கி வழங்கவுள்ளது.
மக்கள் வங்கி பரிசாக வழங்கும் இந்த பரிசு சான்றிதழை அருகாமையில் உள்ள மக்கள் வங்கி கிளையில் சமர்ப்பித்து “இசுறு உதான” சேமிப்பு கணக்கொன்றை ஆரம்பியுங்கள்.
இந்த வேலை திட்டம் இசுறு உதான “சுதந்திர பிறப்பு” எனப் பெயரிடப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர பிறப்பு பரிசு சான்றிதழ் வழங்கும் திட்டம் 11-ம் வருடமாக வெற்றிகரமாக தொடர்ந்துள்ளது.
குழந்தைகளின் எதிர்காலம், பெற்றோர்களின் இலட்சிய நோக்காகவும், முதல் கடமையும் ஆகும். இந்த உலகத்தில் பிறந்த தினத்தில் இருந்து தனது இலட்சிய பாதையில் வெற்றிகரமாக செல்வதற்கு, இசுறு உதான பரிசு சான்றிதழ் மூலமாக சிறந்த சந்தர்ப்பத்தை மக்கள் வங்கி வழங்கியுள்ளது.
தேசிய அரச வங்கியான மக்கள்வங்கியின் சேவையும் அர்ப்பணிப்பும் இதன் மூலம் தெளிவாகிறது.
இந்த சுதந்திர வாரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, மக்கள் வங்கியின் பிரதான நிறைவேற்று அதிகாரி பொது முகாமையாளர் என். வசந்த குமார் அவர்களால் கொழும்பு காசல் வைத்திய சாலையில் நடைபெறவுள்ளதுடன், நாடளாவிய குறிப்பிட்ட வைத்தியசாலைகளிலும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments
Post a Comment