தவிசாளர் பதவி, திருகோணமலைக்கு வேண்டும்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களால் தராசுச் சின்னத்தில் ஆரம்பிக்கப்பட்ட அந்த காலம் தொடுத்து , இன்று மிகப் பெரிய மரமாக விசுவரூப வளர்ச்சி அடைந்த இந்தக் காலம் வரை, பல தியாகங்களும், போராளிகளின் உதிரங்களும் உரமாகிக் கிடக்கிறது.
அந்த தியாக வரலாற்றின் கனிசமான பங்களிப்பும், கட்சியை முழு நாட்டு மக்களும் திரும்பிப் பார்க்க வைத்த முதல் மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை முஸ்லிம் காங்கிரசுக்கு அளித்து கட்சிக்கு நம்பிக்கையையும், புது உத்வேகத்தையும் வழங்கியது திருகோணமலை மாவட்டமே என்றால் மிகையாகாது.
வரலாற்றில் பல தலைவர்கள் வந்தார்கள் ,இருந்தார்கள், போனார்கள், இதில் பலர் சுயநல அரசியலுக்காக கட்சியை பகடைக் காயாக பாவித்ததை கண்டுள்ளோம்,
ஆனால் தலைவர் ரவூப் ஹகீம் போலவே, கட்சி எந்த நிலையில் இருந்தபோதும் கட்சிக்கும் தலைமைக்கும் இம்மியளவும் பிசகாது விசுவாசமாக இருக்கும் ஒரே மகன் நமது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.S.தௌபீக் அவர்கள் மட்டுமே என்றால் யாராளும் மறுக்க முடியாது.
இன்று இந்தக் கட்சிக்கு பொருத்தமான ஒரு தவிசாளர் தேவைப்படுகிறது, அது கிழக்கு மாகாணத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது, இதுவரை எந்த பெரிய கட்சியும் இது போன்ற கட்சியின் பொருப்பான உயர் பதவியை திருகோணமலை மாவட்டத்துக்கு வழங்கியதும் இல்லை, இந்த திருகோணமலை மாவட்டமும் கிழக்கு மாகாணத்தின் தலைநகரமே என்பதை பலரும் நினைப்பதும் இல்லை.
நாம் இப்போது கௌரவ தலைவர் ரவூப் ஹகீம் அமைச்சர் அவர்களிடம் விநயமாகவும், பணிவன்புடனும் முன் வைக்கும் கோரிக்கை எமது சகோதரர் M.S.தௌபீக் MP அவர்களை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளராக முன் மொழியுங்கள், எமது மக்களுக்கு அந்த கௌரவத்தை தாருங்கள் என்பதாகும்.


Comments
Post a Comment