திருகோணமலையில் வெளிநாடு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும் சேவை
திருகோணமலை பட்டணமும் சூழலும் கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட இடங்களில் வெளிநாடு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கான நடமாடும் சேவை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமும் இணைந்து நடமாடும் சேவையினை 01.02.2017 புதன்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் கேட்போர் கூடத்தில் காலை 9மணி தொடக்கம் 11.15 மணி வரை இடம்பெற்றது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதாஅத்துகோரல அவர்களும் பாவட்ட பாராளுமன்ற உறப்பினர் அப்துல்லா மஃறூப் மற்றம் திருகோணமலை பட்டனமும் சூழலுக்கும் பிரதேச செயலாளர் பங்கேற்புடன் ஆரம்பமானது.
மக்களின் வெளிநாட்டு பயணத்தி;ன் ஊடாக பதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தீர்வைபெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற நடமாடும் சேவை இதுவாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஃறூப் கூறுகையில் வெளிநாடு சென்று பாதிக்கப்பட்ட நிலையில் நமது நாட்டில் மக்கள் உள்ளார்கள் அவர்களின் நிலமையை அறிந்து நடமாடும் சேவையை செய்கின்றது வெளிநாட்டு அமைச்சு திருகோணமலை மாவட்டத்தில் 6 பிரதேச செயலகப்பிரிவில் இவ் நடமாடும் சேவை இடம்பெற உள்ளது. குச்சவெளி பிரதேச செயலகப்பிரிவில் 1300 பேர் பதிவு செய்து சென்றுள்ளர்கள் என்று கூறினார்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொள்ளும் மக்களின் நிலைப்பாட்டையும் பற்றியும் தெளிவுப்படுத்தினார் 2009 ஆண்டு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கு அமைய எமது நாட்டில் இருந்து வேலைவாய்ப்புக்காக செல்லும் மக்களின் நலன் கருதி புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளோம்.
2012 ம் ஆண்டு 8மாதம் தொடக்கம் 5 வயதிற்கு குறைந்த பிள்ளைகள் இருக்கும் தாய் வேலைக்காக வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொள்ள முடியாது என்று நாடு முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது முக்கிய விடயமாகும். வேலைக்காக வெளிநாட்டுப்பயணத்தை மேற் கொள்ளும் அனைவரும் கட்டாயம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்தபின் உங்கள் வெளிநாடுக்கான பயணத்தை மேற் கொள்ள வேண்டும்.
மக்களிடயே காணப்படும் பதிவு செய்து வெளிநாடு செல்லும் ஒருவரின் சமுர்த்தி முத்திரை வெட்டப்படுகின்றது என்பதால் அவர்கள் பதிவு செய்யாது பிழையான வழிகளில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கின்றார்கள்.
தற்போது எமது அமைச்சின் கீழ் உள்ள உத்தியோகத்ர்கள் வெளிநாட்டுப்பயணத்தை மேற்கொள்ளும் நபரின் குடும்ப பிண்ணி அறிக்கை மட்டும்மல்ல குடும்ப நலன்புரி கண்காணிப்பு நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று கூறினார்.
நடமாடும் சேவையில் பயனை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் வருகை தந்து இருந்தார்கள் அதில் வெளிநாட்டுப்பணத்தை மேற்கொண்டு உடல்ரீதியாவும், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பொய் குற்றச்சட்டுகளுக்கு உட்பட்டு சிறையில் உள்;ளவர் பற்றியும், சம்பளம் வழங்ப்படாத நிலையில் நாடு திரும்பியவர்கள,; முகவர்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள்; கலந்து கொண்டார்கள் அவர்களின் முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.


Comments
Post a Comment