திருகோணமலை கந்தளாயில் உணவகங்கள், திடீர் சோதனை
திருகோணமலை கந்தளாயில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றுக்கு கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் டபிள்யு.எல்.திஸாநாயக்க தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை(12) நேரடியாகச் சென்று உணவுப் பாதுகாப்பு தொடர்பான விழிப்பூட்டல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த விழிப்பூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இத்திட்டத்தின் மூலம் கந்தளாய் நகரிலுள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள்,சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றுக்கு கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி திஸாநாயக்க தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினர் நேரடியாகச் சென்று உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பராமரிப்பு தொடர்பாக அதன் உரிமையாளர்கள் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கும் விழிப்பூட்டல் நடவடிக்கைகளைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு பாதுகாப்பை எவ்வாறு மேற்கொள்வது தொற்றுநோய் வராமல் எவ்வாறு தடுப்பது இவற்றில் கடமையாற்றும் ஊழியர்கள் எவ்வாறு சுகாதாரமான முறையில் நடந்து கொள்வது பற்றி இதன் போது விளக்கிக் கூறியதாக கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி டபிள்யு.எல்.திஸாநாயக்க தெரிவித்தார்.


Comments
Post a Comment