ஒரு திராட்சை கொடி தேம்பி அழுகிறது நூல் வெளியிடு

(ihzana fareed)

கிண்ணியாவை சேர்ந்த கலாபூசணம் ஏ.எம்.எம்.அலி எழுதிய மூன்றாவது  "ஒரு திராட்சைக் கொடி தேம்பி அழுகின்றது" கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிறு (26) காலை 9.00 மணிக்கு கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் நடைபெற்றது 

திருகோணமலை மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சீ.எம்.முஸ்இல் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

 சிறப்பு அதிதிகளாக கிண்ணியா நகர சபை செயலாளர் திருமதி யாழினி நரேந்திரநாத், பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி முனவ்வரா நளீம், கலந்துகொண்டனர்.

 பிரதம நூலகர் எம்.ரீ.சபருள்ளாகான் வரவேற்புரையையும், சட்டத்தரணி கவிஞர் ஏ.சீ.எம்.இப்ராஹீம் நூல் அறிமுக உரையையும், கலாபூசணம் மூதூர் முகைதீன் நயவுரையையும், சட்டத்தரணி கவிஞர் கிண்ணியா சபருல்லாஹ் நூலாய்வுரையையும் நிகழ்த்தினர்.

 கவிமணி அ.கௌரிதாசனின் வாழ்த்துப் பாவும், ஏ.எஸ்.ரகுமானின் பாடலும் இங்கு இடம்பெற்றது.

கிண்ணியா முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் இந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.

 இதில் முதற் பிரதியை நூலாசிரியர் ஏ.எம்.எம்.அலியிடமிருந்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் பெற்றுக் கொண்டார்.




Comments